Home » கேளிக்கை » மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கிறார் வித்யா பாலன்

மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கிறார் வித்யா பாலன்

மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

👤 Sivasankaran21 April 2020 4:50 PM GMT
மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கிறார் வித்யா பாலன்
Share Post

கொரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.

நடிகர்கள், நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து சமூகவலைதளங்களில் மக்களை மகிழ்வித்து வருகின்றார்கள்.

வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே உருவாக்க முடியும். துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு வளையங்கள் தேவைப்படும், பைகள், ஸ்கிரீன்களில் உள்ள வளையத்தையோ அல்லது நாம் தலை மற்றும் காதுகளில், கைகளில் பயன்படுத்தும் வளையத்தையோ, அல்லது ரப்பர் பேண்டையே எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் மாஸ்க் தயாரித்து விடலாம் என்று வீடியோவில் கூறியுள்ளார்.