சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னேறியவர் அருண் விஜய். குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் அருண் விஜய்.
சமீபத்தில் மாபியா என்ற படத்தில் மிகவும் ஸ்டைலாக மாறியுள்ளார். அருண்விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி... தன்னம்பிக்கையோடு உழைத்திடு! உயர்ந்திடு!" என்று கூறியுள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் தினந்தோறும், தன்னால் முடிந்த ஊக்கத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரின் ட்வீட்கள் ஊக்கத்துடனும் துடிப்புடனும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.