Home » கேளிக்கை » கமலின் கொரோனா விழிப்புணர்வு பாடல்

கமலின் கொரோனா விழிப்புணர்வு பாடல்

விழிப்புணர்வு பாடலை அவருடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் பாடியுள்ளனர்.

👤 Sivasankaran23 April 2020 3:57 PM GMT
கமலின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
Share Post

திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் எழுதி, இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை அவருடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் பாடியுள்ளனர்.

"அறிவும், அன்பும்" என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடலை கமல், ஸ்ருதி ஹாசன், அனிருத், சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன், முகேன் ஆகியோர் பாடியுள்ளனர். இன்று வெளியான அப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.