Home » கேளிக்கை » போலீசுக்கு உதவினார் நகைச்சுவை நடிகர் யோகிபாபு

போலீசுக்கு உதவினார் நகைச்சுவை நடிகர் யோகிபாபு

என்95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

👤 Sivasankaran26 April 2020 1:50 PM GMT
போலீசுக்கு உதவினார் நகைச்சுவை நடிகர் யோகிபாபு
Share Post

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் சமூகவலைதளங்களில் உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். நகைச்சுவை நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.