Home » கேளிக்கை » அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

👤 Sivasankaran3 May 2020 3:30 PM GMT
அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் தெரியுமா?
Share Post

சூர்யா- ஹரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு 'அருவா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் சூர்யா படத்திற்கு இமான் முதன்முறையாக இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.