Home » கேளிக்கை » அது நான் இல்லை.. நகைச்சுவை நடிகர் செந்தில்

அது நான் இல்லை.. நகைச்சுவை நடிகர் செந்தில்

சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்.

👤 Sivasankaran5 May 2020 4:29 PM GMT
அது நான் இல்லை..  நகைச்சுவை நடிகர் செந்தில்
Share Post

தமிழ் சினிமாவில் எல்லா தரப்பினருமே ரசித்து பார்க்கும்படி நகைச்சுவையில் அசத்தியிருப்பார் செந்தில். தற்போதும் செந்தில் கவுண்டமணி நகைச்சுவை காட்சியை ரசிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

"நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்."

"கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோசம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். என டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியானது.

இந்த டுவிட்டர் கணக்கு பற்றி செந்திலிடம் கேட்டதற்கு அது நான் இல்லை. டுவிட்டர் என்றால் என்ன... அது பற்றி எதுவும் தெரியாது. அது போலியானது என்று கூறிவிட்டார்.