பிரபல ஹாலிவுட் நடிகர் அண்டோனியா போலிவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தெற்கு கொலம்பியாவில் உள்ள லெட்டிசியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. சிரோ குர்ரா இயக்கிய எம்ப்ராஸ் ஆப் தி செர்பன் படத்தில் அண்டோனியா போலிவர் நடித்து பிரபலமானார். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கிரீன் பிரண்டீயர் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.