உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது கொரோனா வைரஸ். கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. ஆண், பெண் என பேதம் இல்லாமல் இரவு பகலாக போலீசார் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.
ஓடிசா மாநிலத்தில் இருக்கும் பெண் துணை ஆய்வாளரான சுபஸ்ரீ நாயக் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மனநலம் குன்றிய வயதான ஒரு பெண்மணிக்கு தான் வைத்திருந்த உணவை 'ஊட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிரஞ்சீவி, அந்த பெண் போலீசாருக்கு நன்றி தெரிவிக்க விரும்பி, அவரது தொலைபேசி எண்ணை பெற்று வீடியோ சாட்டிங்கில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.