Home » கேளிக்கை » அந்த சம்பவமே மாஸ்டர் படத்தின் கதை

அந்த சம்பவமே மாஸ்டர் படத்தின் கதை

படத்தின் பின்னணி பணிகள் தாமதமானது. படம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது.

👤 Sivasankaran14 May 2020 3:51 PM GMT
அந்த சம்பவமே மாஸ்டர் படத்தின் கதை
Share Post

விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பின்னணி பணிகள் தாமதமானது. படம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது.

'மாஸ்டர்' கதையை எழுதிய பொன் பார்த்திபன், தனது சமீபத்திய பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவலை கூறியிருக்கிறார். அதாவது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையில் ஒரு நபரின் கதையால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளாராம்.