Home » கேளிக்கை » பொன்மகள் வந்தாள் படம் பற்றி படக்குழுவினரின் அறிவிப்பு

'பொன்மகள் வந்தாள்' படம் பற்றி படக்குழுவினரின் அறிவிப்பு

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

👤 Sivasankaran19 May 2020 3:32 PM GMT
பொன்மகள் வந்தாள் படம் பற்றி படக்குழுவினரின் அறிவிப்பு
Share Post

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார்.

இப்படத்தில் ஜோதிகா வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படம் வருகிற மே 29-ஆம் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் டிரைலரை மே 21ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.