Home » கேளிக்கை » பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட என்ன காரணம்?

பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட என்ன காரணம்?

சின்ன பட்ஜெட் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் போன்றவற்றுக்கு இந்த தளங்கள் ஒரு வரப்பிரசாதம்.

👤 Sivasankaran21 May 2020 2:41 PM GMT
பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட என்ன காரணம்?
Share Post

ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் 29-ஆம் திகதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

இணையதளத்தில் நேரடியாக வெளியாவது பற்றி ஜோதிகாவிடம் கேட்டதற்கு, இப்போது இந்த கொரோனா ஊரடங்கால் எல்லோருக்குமே இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. படத்தை ரிலீஸ் செய்யும் அமேசான் பிரைமுக்கு 200 நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனவே சின்ன பட்ஜெட் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் போன்றவற்றுக்கு இந்த தளங்கள் ஒரு வரப்பிரசாதம்.

பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட கொரோனா மட்டும் தான் காரணம். நிலைமை சரியாகும் வரை காத்திருக்காமல் மக்களின் பார்வைக்கு படத்தை கொண்டு வந்து விடலாம் என்று முடிவுசெய்தோம் என்றார் ஜோதிகா.