Home » கேளிக்கை » நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு

நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு

வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

👤 Sivasankaran29 May 2020 2:25 PM GMT
நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு
Share Post

தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.

இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8 வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த விக்னேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.