Home » கேளிக்கை » பிரபல பாடலாசிரியர் ஜாவத் அக்தருக்கு டாகின்ஸ் விருது

பிரபல பாடலாசிரியர் ஜாவத் அக்தருக்கு டாகின்ஸ் விருது

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

👤 Sivasankaran8 Jun 2020 3:46 PM GMT
பிரபல பாடலாசிரியர் ஜாவத் அக்தருக்கு டாகின்ஸ் விருது
Share Post

இந்தியாவின் பிரபல பாடலாசிரியரான ஜாவத் அக்தர், ரிச்சர்ட் டாகின்ஸ் விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் மதச்சார்பின்மை, பகுத்தறிவியல் ஆகியவற்றை வெளிப்படுத்தி அறிவியல் உண்மையைக் கடைப்பிடிப்பவருக்கு விருது வழங்கிக் கெளரவிக்கிறது அறிவியலாளர் ரிச்சர்ட் டாகின்ஸ் அறக்கட்டளை. இந்த வருடம் ரிச்சர்ட் டாகின்ஸ் விருதுக்கு இந்தியாவின் பிரபல பாடலாசிரியரான ஜாவத் அக்தர் தேர்வாகியுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.