Home » கேளிக்கை » கொரோனாவுக்கு மலையாளத் தயாரிப்பாளர் பலி

கொரோனாவுக்கு மலையாளத் தயாரிப்பாளர் பலி

அவரை சார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

👤 Sivasankaran10 Jun 2020 12:00 PM GMT
கொரோனாவுக்கு மலையாளத் தயாரிப்பாளர் பலி
Share Post

எஸ். ஏ. ஹாசன் ஹலோ துபாய்க்காரன் என்ற மலையாள படத்தைத் தயாரித்து நடித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவரின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனாத் தொற்று இருப்பதை கண்டறிந்து செயற்கை சுவாசக்கருவி வைத்துச் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். அவரின் மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.