Home » கேளிக்கை » மீண்டும் தள்ளிப் போகிறது, விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ்?

மீண்டும் தள்ளிப் போகிறது, விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ்?

தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், ரசிகர்கள் வந்து படம் பார்ப்பார்களா என்பது சந்தேகம்

👤 Sivasankaran11 Jun 2020 2:00 PM GMT
மீண்டும் தள்ளிப் போகிறது, விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ்?
Share Post

கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. முடக்கம் நீக்கப்பட்டு கொரோனா பீதியில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில மாதங்களாகும். அதனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், ரசிகர்கள் வந்து படம் பார்ப்பார்களா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் மற்றும் ரஜினியின் அண்ணாத்தே படங்களின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.