Home » கேளிக்கை » பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார்.

👤 Sivasankaran13 Jun 2020 1:00 PM GMT
பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்
Share Post

பாரதிராஜா இயக்கிய நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, வேதம்புதிது , புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கண்ணன். இவர் பாரதிராஜாவின் ஆஸ்தான கேமரா மேன் என்றே சொல்லாம். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார்.

50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜா இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.