Home » கேளிக்கை » ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran16 Jun 2020 3:31 PM GMT
ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைப்பு!
Share Post

2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், உலகம் முழுக்க கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.