Home » கேளிக்கை » விரைவில் தந்தையாகப் போவதாக அறிவித்த நகுல்

விரைவில் தந்தையாகப் போவதாக அறிவித்த நகுல்

ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

👤 Sivasankaran17 Jun 2020 3:24 PM GMT
விரைவில் தந்தையாகப் போவதாக அறிவித்த நகுல்
Share Post

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

2016, பிப்ரவரி 28 அன்று ஸ்ருதியைக் காதல் திருமணம் செய்தார் நடிகர் நகுல். ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் தந்தையாகப் போவதாக நகுல் இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார்