தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகையை 2017-ம் ஆண்டு கேரளாவில் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக மலையாள நடிகர் திலீப்பும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தார்.
கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 24-ம் தேதி விசாரணையை நிறுத்தி வைத்தனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. நடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரிடம் குறுக்கு விசாரணை நடக்கிறது.