Home » கேளிக்கை » நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம்

நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம்

மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ளார்.

👤 Sivasankaran3 July 2020 1:47 PM GMT
நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம்
Share Post

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் நடன இயக்குநராக பணிபுரிந்து வந்தவர் சரோஜ் கான். இவருக்கு வயது 71.

2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடன இயக்குனராக பணிபுரிந்த இவர், மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ளார்.

சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது மும்பையின் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சரோஜ்கானின் மறைவுக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.