இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் தனது மகனின் மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் சுஷாந்த் சிங் மிகவும் தைரியமானவர், அவர் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும். அவரது மரணம் ஒரு கொலை. என்றாலும் தற்கொலை என்று நிரூபிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு நான் கோருகிறேன். என்று தெரிவித்திருக்கிறார்.