Home » கேளிக்கை » ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்

87 வயதில் தி ஹேட்ஃபுல் எயிட் படத்தின் மூலம் ஆஸ்கர் வென்றார் மோரிக்கோனி.

👤 Sivasankaran6 July 2020 3:08 PM GMT
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்
Share Post

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி (Ennio Morricone) காலமாகியுள்ளார். அவருக்கு வயது 91.

ரோமில் உள்ள மருத்துவமனையில் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

87 வயதில் தி ஹேட்ஃபுல் எயிட் படத்தின் மூலம் ஆஸ்கர் வென்றார் மோரிக்கோனி.

மோரிக்கோனி-யின் மறைவுக்குத் திரையலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியப் பிரதமரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.