Home » கேளிக்கை » நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவச் சிகிச்சைக்கு கமல் உதவி!

நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவச் சிகிச்சைக்கு கமல் உதவி!

1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

👤 Sivasankaran10 July 2020 3:31 PM GMT
நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவச் சிகிச்சைக்கு கமல் உதவி!
Share Post

சிறுநீரகக் கோளாறு பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பொன்னம்பலத்துக்கு கமல் ஹாசன் உதவியுள்ளார்.

பொன்னம்பலம் சண்டைக்கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். 1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அறிந்த கமல்ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். மேலும், பொன்னம்பலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கமல் தெரிவித்துள்ளார்.