பிரபல இந்தி நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார். என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார்.
அனுஷ்கா பிரபல நாளிதழ் ஒன்றுக்கு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதன் புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். கவர்ச்சியான அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்பட்டது. தற்போது ரசிகர்களால் அதிகளவில் லைக்ஸ் போடப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.