Home » கேளிக்கை » கவலைகளில் இருந்து மீள இலியானா கூறும் யோசனை

கவலைகளில் இருந்து மீள இலியானா கூறும் யோசனை

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ரசிகர்கள் அனைவரும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

👤 Sivasankaran15 July 2020 3:10 PM GMT
கவலைகளில் இருந்து மீள இலியானா கூறும் யோசனை
Share Post

நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். "எனக்கு சில நேரங்களில் மனதில் தாங்க முடியாத அளவு வருத்தங்களும் கவலைகளும் ஏற்படும். அந்த நேரத்தில் நான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும் எல்லாமே மாயமாக மறைந்து விடும். எனவே எல்லோரும் இந்த யுக்தியை கையாண்டு கவலையில் இருந்து மீளுங்கள் என்று இலியானா கூறியுள்ளார்.

எனது உடற்பயிற்சி நேரம் எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு நாள் 75 நிமிடம், ஒரு நாள் 45 நிமிடம் ஒரு நாள் 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ரசிகர்கள் அனைவரும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இலியானா கூறினார்.