Home » கேளிக்கை » ஐஸ்வர்யா ராய் நலமாக உள்ளார்: மருத்துவமனை தகவல்

ஐஸ்வர்யா ராய் நலமாக உள்ளார்: மருத்துவமனை தகவல்

கொரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

👤 Sivasankaran18 July 2020 2:23 PM GMT
ஐஸ்வர்யா ராய் நலமாக உள்ளார்: மருத்துவமனை  தகவல்
Share Post

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகிய இருவரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

கொரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்கள்.

ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகளும் இன்னும் இரு நாள்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.