இன்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சூர்யா. இந்நிலையில் இன்ஸ்டகிராம் தளத்தில் இணைந்துள்ளார் சூர்யா.
அனைவரையும் இங்குச் சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம் என்று தனது பதிவில் எழுதியுள்ளார்.
இதுவரை - நடிகர் கார்த்தி, சகோதரி பிருந்தா, 2டி நிறுவனம், 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் என நான்கு இன்ஸ்டகிராம் கணக்குகளை மட்டும் சூர்யா பின்தொடர்கிறார்.