Home » கேளிக்கை » ட்விட்டருக்கு மீண்டும் திரும்பினார் நடிகை வனிதா விஜயகுமார்

ட்விட்டருக்கு மீண்டும் திரும்பினார் நடிகை வனிதா விஜயகுமார்

பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா்.

👤 Sivasankaran24 July 2020 3:46 PM GMT
ட்விட்டருக்கு மீண்டும் திரும்பினார் நடிகை வனிதா விஜயகுமார்
Share Post

சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரிலிருந்து விலகிய நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா்.

இதையடுத்து வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜயகுமாரின் திருமணம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரையுலகினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள். இதனால், சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்ட சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்தார். வனிதா மீது சூர்யா தேவியும் புகார் அளித்தார்.

சூர்யா தேவியை வடபழனி மகளிர் காவல்துறையினர் கைது செய்தார்கள். கைதான சூர்யா தேவி ஜாமீனில் பிறகு விடுவிக்கப்பட்டார்.

நடிகை வனிதா விஜயகுமார்,சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரிலிருந்து விலகினார். நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.