Home » கேளிக்கை » ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஹார்திக் பாண்டியா

ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஹார்திக் பாண்டியா

கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் பாண்டியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

👤 Sivasankaran30 July 2020 2:11 PM GMT
ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஹார்திக் பாண்டியா
Share Post

பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

மும்பை ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஊரடங்குக் காலத்தில் நடாஷாவை பாண்டியா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளதாக ட்விட்டரில் பாண்டியா அறிவித்துள்ளார். இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் பாண்டியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.