Home » கேளிக்கை » திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை

திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை

திரையுலகம் மீண்டும் இயங்குவதற்கு மேலும் ஒரு மாதம் வலியுடன் காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

👤 Sivasankaran31 July 2020 11:59 AM GMT
திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை
Share Post

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை எனத் தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் கூறியதாவது: திரையுலகம் மேலும் பாதிக்கப்படப் போகிறது. பொதுவாகவே திரையுலகம் மீது அக்கறையில்லாத நிலை உள்ளது. எனவே அதன் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. திரையுலகம் மீண்டும் இயங்குவதற்கு மேலும் ஒரு மாதம் வலியுடன் காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.