Home » கேளிக்கை » சுசாந்த் சிங் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பிகார் அரசு பரிந்துரை

சுசாந்த் சிங் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பிகார் அரசு பரிந்துரை

பிகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம் என்றார்.

👤 Sivasankaran4 Aug 2020 3:50 PM GMT
சுசாந்த் சிங் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பிகார் அரசு பரிந்துரை
Share Post

நடிகர் சுசாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கப் பரிந்துரை செய்வதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமாா் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34), கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் நடிகர் சுசாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கப் பரிந்துரை செய்வதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமாா் அறிவித்துள்ளார். சுசாந்தின் தந்தை கே.கே. சிங், நிதிஷ் குமாரிடம் இன்று பேசினார். இதையடுத்து, ஒரு பேட்டியில் நிதிஷ் குமார் பேசியதாவது:

சுசாந்தின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். பிகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம் என்றார்.