Home » கேளிக்கை » கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கருணாஸ்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கருணாஸ்!

திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

👤 Sivasankaran5 Aug 2020 3:42 PM GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கருணாஸ்!
Share Post

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் சமீபத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏ-வாக கருணாஸ் இருந்து வருகிறார்.