லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த 'அண்ணாத்த' படம், இன்னும் முடிவடையவில்லை. அந்த படம் முடிவதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்பதால், இரண்டு மாதங்களில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தெலுங்கு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து இருக்கிறார். தெலுங்கு படத்தை முடித்துக் கொடுத்து விட்டு, அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது.