Home » கேளிக்கை » 'அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் குணமடைவார்' - எஸ்.பி.பி. சரண்!

'அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் குணமடைவார்' - எஸ்.பி.பி. சரண்!

பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார் என்று கூறினார்.

👤 Sivasankaran27 Aug 2020 1:53 PM GMT
அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் குணமடைவார் - எஸ்.பி.பி. சரண்!
Share Post

பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் நுரையீரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார் என்று கூறினார்.

இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி விரைவில் குணமடைவார் என்று கூறியுள்ளார்.