Home » கேளிக்கை » விரைவில் கதாநாயகனாக களமிறங்கும் பிக்பாஸ் முகன் ராவ்!

விரைவில் கதாநாயகனாக களமிறங்கும் பிக்பாஸ் முகன் ராவ்!

இப்படத்தை பெண் இயக்குநர் அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

👤 Sivasankaran29 Aug 2020 2:09 PM GMT
விரைவில் கதாநாயகனாக களமிறங்கும் பிக்பாஸ் முகன் ராவ்!
Share Post

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசன் மூலம் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மூகன் ராவ். அந்த சீசனின் டைட்டிலை கூட முகன் ராவ் தான் தட்டி சென்றார். இவர் எப்போது ஹீரோவாக நடிப்பார் என இவரின் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் இவர் நடிக்க இருக்கும் முதல் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பெண் இயக்குநர் அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் முகினுக்கு ஜோடியாக திவ்யா பாரதி அல்லது சீரியல் நடிகையான சிவானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.