Home » கேளிக்கை » பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்

பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்

கரீனா கபூர் ஸ்பிரிட் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

👤 Sivasankaran14 Oct 2021 11:25 AM GMT
பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்
Share Post

பிரபாஸ், சமீபத்தில் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்படத்திற்கு 'ஸ்பிரிட்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராவதாக குறிப்பிட்டிருந்தனர்.

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஸ்பிரிட் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை கரீனா கபூர் பிரபாஸுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.