Home » கேளிக்கை » விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்கும் கவுதம் மேனன்

விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்கும் கவுதம் மேனன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கிறார்.

👤 Sivasankaran24 Nov 2021 3:04 PM GMT
விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்கும் கவுதம் மேனன்
Share Post

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்.சி.புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது.

இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கிறார்.