மூத்த நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான கே.பி. ஹேரத் காலமானார்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
👤 Sivasankaran30 Jan 2023 2:43 PM GMT

சிறிலங்காவின் மூத்த நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான கே.பி. ஹேரத் தனது 81வது வயதில் நேற்று (ஜன. 29) காலை காலமானார்.
கே.பி. குருநாகல் மாவட்டத்தின் நவகத்தேகமவில் பிறந்த ஹேரத், இப்பாகமுவ மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
நாடக ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என சிறிலங்கா நாடகத்துறைக்கு அளப்பரிய சேவை செய்தவர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire