Home » கேளிக்கை » விமான நிலையத்தில் எஸ்எஸ் ராஜமௌலி, எம்எம் கீரவாணி, காலபைரவா ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு
விமான நிலையத்தில் எஸ்எஸ் ராஜமௌலி, எம்எம் கீரவாணி, காலபைரவா ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு
ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றது.
👤 Sivasankaran18 March 2023 11:07 AM GMT

எஸ்.எஸ்.ராஜமௌலி, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, அவரது மகன் காலபைரவா, எஸ்.எஸ்.கார்த்திகேயா மற்றும் ரமா ராஜமௌலி ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் மார்ச் 17ஆம் தேதி ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்தனர்.
பெரிய ஆஸ்கார் விருதுக்குப் பிறகு அவர்கள் இந்தியாவில் தோன்றிய முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றது.
எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினரை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு விசில் அடித்தும், கைதட்டியும் வரவேற்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire