Home » கேளிக்கை » களவாணி - 2 திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

களவாணி - 2 திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

களவாணி 2 படத்தை வெளியிட கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

👤 Sivasankaran3 July 2019 3:55 PM GMT
களவாணி - 2 திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை
Share Post

களவாணி திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

விமல் மற்றும் ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜூலை 5ம் திகதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால் களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.