Home » கேளிக்கை » கதகளி நடனமேதை மடவூர் வாசுதேவன் நாயர் மரணம்

கதகளி நடனமேதை மடவூர் வாசுதேவன் நாயர் மரணம்

கதகளி நடனத்தில் புகழ்பெற்ற மடவூர் வாசுதேவன் நாயர் அவர்கள், நிகழ்ச்சி ஒன்றில் கதகளி ஆடுகையில் மேடையில் விழுந்து உயிர்இழந்தார்.

👤 Saravana Rajendran7 Feb 2018 2:48 PM GMT
கதகளி நடனமேதை மடவூர் வாசுதேவன் நாயர் மரணம்
Share Post

கேரளாவில் உள்ள ககஸ்தியோடு மகாதேவா கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடன நிகழ்ச்சி நிகழ்த்துகொன்டிருந்த போது, மேடையில் மயங்கிச் சரிந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர்பிரிந்ததை உறுதிசெய்தனர்.
89 வயதாகும் மடவூர் வாசுதேவன் தனது மனைவி சாவித்ரி , மகன் மது மற்றும் மகள்கள் மினி மற்றும் கங்கா ஆகியோருடன் வசித்துவந்தார். பத்ம பூஷண் உட்பட பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா கமலாண்டமலையின் தேக்கண் களரி (கதகாளியின் தெற்கு பள்ளி) மற்றும் கலை கலாத்தியின் முக்கிய கலைஞராக இருந்தவர்.
இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாகரீக மோகத்தில் மெதுவாக மறைந்துவரும் கலைகளில் ஒன்றான கதகளி எண்ணும் நாட்டியக்கலையை மக்களிடையே மீண்டும் கொண்டுவந்து புத்துயிர் ஊட்டியவர். கதகளியில் சேரலத்தின் தெற்கு, மேற்கு கதகளி என இரண்டு பிரிவுகள் உண்டு, வடக்கு கதகளியில் பழமை மட்டுமே முக்கியத்துவம் உண்டு அதில் நவீனத்துவம் எதுவும் சேர்க்கப்படாதால் அது அழிந்து விட்டது, இந்த நிலை தற்கால காலச்சூழலுக்கு ஏற்ப புதிய நாட்டிய நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி ஆர்வமுடன் கற்கும் தனது மாணவர்களுக்கும் அதைக் கற்றுக்கொடுத்து கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருந்த கதகளி மீண்டும் உயிர்பெற்றது. வாசுதேவன் நாயர் அய்க்கிய அரபு நாடுகள், அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடையே பேராதரவு பெற்ற தலைசிறந்த கலைஞராவார்.