Home » கேளிக்கை » பாகிஸ்தான் நடிகை சுட்டுக்கொலை

பாகிஸ்தான் நடிகை சுட்டுக்கொலை

ஆண்களின் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்த பாகிஸ்தானின் பிரபல நடிகையை அடையாலம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

👤 Saravana Rajendran7 Feb 2018 4:23 PM GMT
பாகிஸ்தான் நடிகை சுட்டுக்கொலை
Share Post

பாகிஸ்தானில் ஊடகவியாளர்கள், விளையாட்டு பிரமுகர்கள், பிரபலபாடகர்களை சுட்டுக்கொல்வது மிகவும் சாதரனமானதாக உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் மரணங்கள் பற்றிய செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகை சும்புல் கான் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஆடவர்கள் நடத்தும் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிலர் அனுகியுள்ளனர். இதற்கு நடிகை சும்புல் கான் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவ்விடத்தைவிட்டுச் சென்று விட்டனர். பிறகு சிறிது நேரம் சென்ற பிறகு வேறு சிலருடன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நடிகையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். நடிகை கொலைசெய்யப்பட்டது ஞாயிறன்று காலையில் தெரியவந்தது. நடிகை மரணம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.