Home » கேளிக்கை » மீண்டும் வேதாளம் பத்மாவதியைத் தொடர்ந்து மணிகர்ணிகாவிற்கு எதிர்ப்பு கிளம்புகிறது

மீண்டும் வேதாளம் பத்மாவதியைத் தொடர்ந்து மணிகர்ணிகாவிற்கு எதிர்ப்பு கிளம்புகிறது

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்தீர் கபூர் நடித்த ‘பத்மாவதி’ படத்தைத் தொடர்ந்து தற்போது கங்கனா ரணாவத் நடித்துக் கொண்டிருக்கும் இருக்கும் ஜான்சிராணி வாழ்க்கை குறித்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

👤 Saravana Rajendran9 Feb 2018 10:56 AM GMT
மீண்டும் வேதாளம் பத்மாவதியைத் தொடர்ந்து மணிகர்ணிகாவிற்கு எதிர்ப்பு கிளம்புகிறது
Share Post

தீபிகா படுகோனே நடித்து வெளியான 'பத்மாவத்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்தப் படம் பத்மாவதி என்ற பெயரில் தயாரானது. உருது இஸ்லாமிய கவிஞர் ஒருவரின் கவிதையில் உருவான கதாப்பாத்திரமான பத்மினியை வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தப் படத்தில் தீபிகா ராணி பத்மினியாக நடித்திருந்தார்.

இந்தப்படத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு திரித்து கூறப்படுவதாக கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இப் படத்தில் நடித்த தீபிகா படுகோனே தலைக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பல்வேறு வட மாநிலங்களில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் நாக்கை வெட்டிவிடுவோம் என்றெல்லாம் வன்முறைப் பேச்சுக்கள் பரவியது. எதிர்ப்புகளை மீறி பல்வேறு மாற்றங்களுடன் படம் திரைக்கு வந்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கங்கனா ரணாவத் நடித்து வரும் 'மணிகர்னிகா' என்ற வரலாற்று படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி வருகிறது. விடுதலைப் போரில் அவருக்கிருந்த பங்களிப்பையும் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் லட்சுமி பாய் கதாபாத்திரத்தில் வாள் சண்டை பயிற்சிகள் எடுத்து கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
மணிகர்னிகா படத்துக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். இவர் பாகுபலி படத்திற்கு வசனம் எழுதியவர் ஆவார். இப்படத்தை கிரிஷ் இயக்குகிறார். படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மணிகர்னிகா படத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜான்சி ராணி லட்சுமிபாயின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கும் கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்த இங்கிலாந்து ஏஜெண்டுக்கும் காதல் ஏற்படுவதுபோல் காட்சி வைத்து இருப்பதாக தெரிகிறது என்று கூறி சர்வ பிராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
இதையடுத்து ராணி லட்சுமிபாய் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தால் பத்மாவத் படத்துக்கு நேர்ந்த கதிதான் மணிகர்னிகா படத்துக்கும் ஏற்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா மிரட்டல் விடுத்துள்ளார்.
இப்போதுதான் பத்மாவதி எதிர்ப்பு என்ற பெயரில் கர்னி சேனா என்ற வேதாளம் மரத்தில் இருந்து இறங்கியுள்ளது, இப்போது சர்வபிரமணா மகாசபா என்ற பெயரில் மீண்டும் புறப்பட்டு விட்டார்கள்.
பத்மாவதி திரைப்படம் ராஜபுத்திரர்களைன் பெருமையை விளக்குகிறது ஆகவே நாங்கள்போராட்டத்தை விலக்கிக்கொள்கிறோம் என்று கர்னி சேனா அறிவித்ததன் பேரில் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் இத்திரைப்படம் அனைத்து திரை அரங்குகளிலும் விமர்சையாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது