Home » கேளிக்கை » மீண்டும் உண்ணாநிலையைக் கைவிட்டார் ஜீயர் சாமியார்

மீண்டும் உண்ணாநிலையைக் கைவிட்டார் ஜீயர் சாமியார்

வைரமுத்து சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பற்றி மேற்கோள் கட்டியது தவறு அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இரண்டாவது முறையாக உண்ணாநிலை மேற்கொண்ட சாமியார் தனது பிடிவாதத்தை கைவிட்டு தீர்த்தம் அருந்தி உண்ணாநிலைய முடித்துக்கொண்டார்.

👤 Saravana Rajendran9 Feb 2018 4:01 PM GMT
மீண்டும் உண்ணாநிலையைக் கைவிட்டார் ஜீயர் சாமியார்
Share Post

வைணவர்களுக்கு சிறப்பான மாதமாக கூறப்படும் மார்கழியில் ஆண்டாள் பற்றி வைரமுத்துவை கருத்தரங்கம் ஒன்றில் பேச அழைத்தனர். அவர் ஆண்டாளையும் அவர் கடவுள் மீது கொண்ட பக்தி குறித்தும் புகழ்படப்பேசினார். இறுதியில் இப்படிப்பட்ட ஆண்டாளை வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் தவறாக சித்தரித்துள்ளனர். அவர்கள் ஆய்வு செய்த நூல் இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ளது என மேற்கோள் கட்டியிருந்தார்.
ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசிய பேச்சினை முழுமையாக தினமணி நாளிதழ் வெளியிட்டது, இதைக் கண்ட இந்துத்துவ அமைப்பினர் வைரமுத்து ஆண்டாளை இழிவு படுத்திவிட்டார் என்று வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர். வைரமுத்து தனது நிலை குறித்து தெளிவு படுத்தி விட்டு வருத்தமும் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில்
சிறீவில்லிப்புத்தூர் கோவிலை நிர்வாகிக்கும் சாமியார் ஜீயர் வைரமுத்து சிறீவில்லிப்புத்தூருக்கு வந்து ஆண்டாள் கோவிலில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறி முதல் தவனையாக ஜனவரி மாதம் உண்ணாநிலை மேற்கொண்டார்.
ஆனால் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது உண்ணாநிலையை இரண்டு மணிநேரத்திற்கும் முடித்துக் கொண்டார். இந்த நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் 3 ஆம் தேதி உண்ணாநிலை மேற்கொள்ளப்போவதாக கூறினார். ஆனால் 3 தேதி கடந்துபோனது, இந்த நிலையில் 8 ஆம் தேதி நன்பகலில் உண்ணாநிலையை மேற்கொண்டார்.
ஆனால் வெள்ளியன்று திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சில பிரபலங்கள் சாமியார் ஜீயரைச் சந்தித்து உண்ணாநிலையை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். இதனை அடுத்து தீர்த்தம் அருந்தி தனது 12 மணிநேர உண்ணாநிலையை கைவிட்டார்.