Home » கேளிக்கை » மீண்டும் ஒரு விசில் போடு வீரமாதேவியாக சன்னிலியோன் வருகிறார்.

மீண்டும் ஒரு விசில் போடு வீரமாதேவியாக சன்னிலியோன் வருகிறார்.

இந்திய கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட தளத்தில் நடித்துவந்த ஒரு நடிகையை அப்படியே இந்திய திரை உலகம் ஏற்றுக்கொண்டது என்றால் மக்களிடையே நல்ல மனமாற்றம் உறுவாகிக்கொண்டு இருக்கிறது என்று தானே பொருள்.

👤 Saravana Rajendran10 Feb 2018 12:43 AM GMT
மீண்டும் ஒரு விசில் போடு  வீரமாதேவியாக சன்னிலியோன் வருகிறார்.
Share Post

ஆம் நான் சொல்வது சன்னிலியோனைத் தான். 2015-கனடாவில் இருந்து இந்தியா வந்து இந்தி திரைஉலகில் தடம் பதித்த சன்னிலியோனை இந்திய ரசிகர்கள் அரவணைத்துக் கொண்டார்கள். ஒருவருக்காக ஒரே ஒரு படத்தில் நடிக்க இந்தியா வந்த சன்னி லியோன் இந்திய ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து தனக்கான ஒரு தளத்தை அமைத்துக்கொண்டர். இப்போது தமிழுக்கும் வந்துவிட்டர்.
சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டா கிராமில் ஒரு படம் வெளியிட்டிருந்தார், வணக்கம் தமிழ்நாடு என்று ஆரம்பித்து வீரமா தேவியாக உங்கள் முன் என்றார்.
அந்தப் படத்தில் டெஸ்ட் மேக் அப் காட்சி ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்படத்தின் படம்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. குணசித்திர நடிகர் நாசர், நவ்தீப் போன்றோர் நடித்துள்ள இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 150 நாட்கள் தொடர்ந்து நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறார். 5 இந்தி படங்கள் கைவசம் வைத்துள்ள நிலையில் தெற்கே அதுவும் தமிழில் தனது வருகை ரசிகளின் மனதில் பதிந்துவிடவேண்டும் என்று முழுமையாக நேரமெடுத்து நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரே நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.