Home » கேளிக்கை » ஒரு நாடோடியின் சிறப்பான பயணம்

ஒரு நாடோடியின் சிறப்பான பயணம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள முதல் ஆங்கிலப்படமான த எக்ஸ்டிராடினரி ஜர்னி(ஒரு நாடோடியின் சிறப்பான பயணம்) விரைவில் வெளிவர உள்ளது.

👤 Saravana Rajendran11 Feb 2018 5:54 AM GMT
ஒரு நாடோடியின் சிறப்பான பயணம்
Share Post

தமிழ் நடிகர் தனுஷ் நடித்துள்ள முதல் ஆங்கிலப் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்'. கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நகைச்சுவைக் கோணத்தில் ஒரு காதல் கதையைப் காமெடி படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தில் அஜாதசத்ரு லாவாஷ் படேல் எனும் கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். அஜாதசத்ரு ஒரு நாடோடியாக இருக்கும் ஒரு வித்தைகாட்டும் பாத்திரம். தெருவில் வித்தைகாட்டு கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ், இந்தியை தொடர்ந்து 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' படத்தின் மூலம் ஆங்கில திரைஉலகமாக ஹாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார். பிரெஞ்ச் நாவலைத் தழுவி இப்படம் உருவாகி உள்ளது. மும்பையில் இருந்து பாரீஸ் செல்லும் இளைஞனின் பயண அனுபவங்கள் தான் படத்தின் கதை
நீண்டநாள் தயாரிப்பிலிருந்த இந்தப் படம் ஒருவழியாக முடிந்து இறுதிகட்டவேலைகள் நடக்கிறது. பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்தியாவிலும் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.