Home » கேளிக்கை » ரஜினியின் அரசியலுக்கு லைக்கா?

ரஜினியின் அரசியலுக்கு லைக்கா?

ரஜினியின் அரசியல் கட்சியின் முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தில் மாநில செயலாளராக லைக்கா நிறுவனத்தில் தலைவராக இருந்த ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

👤 Saravana Rajendran15 Feb 2018 9:39 AM GMT
ரஜினியின் அரசியலுக்கு லைக்கா?
Share Post

தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா கருணாநீதி போன்றோர் இல்லாத இடைவெளியைப் பயன்படுத்தி ரஜினி கமல் போன்றோர் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிச.31 தனது அரசியல் நுழைவு அறிவிப்பை வெளியிட்டார். உடனடியாக 2021 சட்டபேரவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும், அதுவரை யாரையும் நாம் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில் தான் சிஸ்டம் சரியில்லை என்று அடிக்கடி கூறி அவரே சர்ச்சையில் சிக்கினார்.
மறுபுறம் நடிகர் கமல்ஹாசனும் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து சுற்றுப்பயணத்தையும் துவங்க உள்ளார். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் முழுநேர அரசியல் என்று அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவரும் வரும் 21-ம் தேதி கட்சியின் பெயர், நிர்வாகிகளை அறிவிக்க உள்ளார்.
நடிகர் விஷாலும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றார். நடிகர் விஜயும் சத்தமில்லாமல் தனக்கான ஆதரவு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தீவிரமாக தனது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை அறிவிக்க உள்ளார். இதனிடையே லைக்கா நிறுவனத்திலிருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்து ரஜினியை சந்தித்து ஆதரவு தெரிவித்த ராஜுமகாலிங்கத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
லைக்கா நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து ராஜு மகாலிங்கம் விலகியது முதல் ரஜினியுடன் உள்ளார்.
பல மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் ஆலோசனை உள்ளிட்டவற்றில் பங்கேற்ற ராஜு மகாலிங்கம் ரஜினிமக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று வெளியான அறிவிப்பு ஒன்றில் ராஜுமகாலிங்கம் மாநிலச் செயலாளர் ரஜினி மக்கள் மன்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஆரம்பகால மன்ற நிர்வாகி சத்திய நாராயணா, தற்போதைய நிர்வாகி சுதாகர் போன்றவர்களை தாண்டி இப்பதவி அளிக்கப்பட்டுள்ளது.