Home » கேளிக்கை » காலாவிற்குப் பிறகு ஆழம் பார்க்கும் ரஜினி

காலாவிற்குப் பிறகு ஆழம் பார்க்கும் ரஜினி

தனது அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து ஆங்காங்கே ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

👤 Saravana Rajendran15 Feb 2018 3:48 PM GMT
காலாவிற்குப் பிறகு ஆழம் பார்க்கும் ரஜினி
Share Post

தனது அரசியல் நுழைவு பற்றி பேச்சோடு நின்று விட்ட ரஜினியின் அடுத்த நடவடிக்கை என்ன என்று ரஜினிக்கே தெரியாமல் உள்ளது. அவரது நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் மாதம் ரஜினி காந்த் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்கள்.
கமல்ஹாசன் பிப்.21 ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கும் சூழலில் ரஜினி இந்த திட்டத்தை வகுத்துள்ளார். அதுபோல் மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாதாகவும் ரஜினி மக்கள் மன்றத்தினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில், அவரது நண்பரும், அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் இன்று சந்தித்தார்.இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை விரைந்து நியமிப்பது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வோரு படம் முடிந்த பிறகு ரஜினி இமயமலைக்கு சென்று களைப்பு நீங்கிவிட்டு வருவது வழக்கம், இப்போதும் காலா படம் வெளியான பிறகு அவர் மீண்டும் இமயமலைக்குச் செல்வாரா அல்லது அப்படி ஏதேனும் திட்டத்தை அவர் வைத்திருப்பார் என்று தெரியவில்லை, இருந்தாலும் அவரது நலம் விரும்பிகள் அவர் சுற்றுப்பயணத்தை துவங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
சுற்றுப்பயணம் குறித்து ரஜினியோ அவரது தலைமை நிர்வாகிகளோ எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது