Home » கேளிக்கை » ஜெயலலிதாவிற்கு சோ என்றால் கமலுக்கு சே வா

ஜெயலலிதாவிற்கு "சோ" என்றால் கமலுக்கு "சே" வா

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேசனை நடிகரும் அரசியல் வாதியாக உருவாமாறி இருக்கும் கமலகாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

👤 Saravana Rajendran16 Feb 2018 3:33 PM GMT
ஜெயலலிதாவிற்கு சோ என்றால் கமலுக்கு சே வா
Share Post

அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் விரைவில் ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதனிடையே, தனது கட்சியை பதிவு செய்ய கமல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் முதல்படியாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார். சந்திப்பில் தனது கட்சிப்பதிவு தொடர்பாக டிஎன் சேஷனுடன் பேசியுள்ளார்.
கமலுக்கு அரசியல் ஆலோசகராக டி.என்.சேஷன் இருப்பாரா என்று தெரியவில்லை. இருப்பினும் ஜெயலலிதாவிற்கு ஒரு சோ.ராமசாமி போல் கமலகாசனுக்கு ஒரு சேஷன் இருந்தாலும் வியப்பதற்கில்லை.
சந்திப்பிற்குப் பின்று ஊடகவியளார்களுடன் பேசிய கமல்ஹாசன், டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேருவேன் என்றார். அரசியல் பயணம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்பெற தங்களை சந்திக்கலாமா? என சேஷனிடம் கேட்டேன்" என்றார்.