Home » கேளிக்கை » களத்தூர் கண்ணம்மா முதல் அரசியல் களம் வரை

களத்தூர் கண்ணம்மா முதல் அரசியல் களம் வரை

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னுடைய 63-ஆவது வயதில் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தது வரை கமலின் வாழ்க்கை குறித்து சிறிய தொகுப்பு.

👤 Saravana Rajendran21 Feb 2018 8:09 AM GMT
களத்தூர் கண்ணம்மா முதல் அரசியல் களம் வரை
Share Post

கமலகாசன் 1954-ஆம் நவம்பர் 7-ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். அவரது தந்தை சீனிவாசன் ஒரு வழக்கறிஞர் தாய் ராஜலட்சுமி. சிறுவயதிலேயே பணிநிமித்தம் தனது குடும்பத்துடன் சென்னை வந்துவிட்டார்
கமலின் தந்தை வழக்கறிஞர் ஆகையால் திரைஉலக நட்சத்திரங்களின் பிரச்சனைகளுக்காக அவர் வாதாடுவார். அந்த வகையில் திரைஉலகத்தினருடன் அவரது குடும்பத்தினருக்கு நல்ல தொடர்பு ஏற்பட்டது. அப்போது எ.வி.எம்.சரவணன் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க சிறுவன் ஒருவனை தேடிக்கொண்டு இருந்தார் அப்போது கமலகாசன் குறித்து எ.வி.எம் மிடம் பரிந்துரை செய்தனர்,
கடந்த 1960-இல் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்த கமலுக்கு ஜனாதிபதியின் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தின் காதல் நாயகனாக நவரச நாயகனாக தொடர்ந்து வலம் வந்தார்
காதல் பரிசு, சகலகலாவல்லவன், குரு, என இளைமைததும்பும் பாத்திரங்களில் நடித்த கமலகாசன் 90-களுக்குப் பிறகு
நாயகன், இந்தியா, ஹே ராம், தசாவதாரம், விருமாண்டி, விஸ்வரூபம் என தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கத்துவங்கினார். கமல் கடந்த 1979-இல் கலைமாமணி, 1990-இல் பத்மஸ்ரீ, 2014-இல் பத்விபூஷன், 2016-இல் செவாலியர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். சிவாஜி கணேசனுக்கு பிறகு செவாலியே விருது வாங்கியவர் கமல்.
கடந்த 2014-இல் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட கூடாது இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான போராட்டம் நடத்தினர். அரசியல் லாபத்திற்காக ஜெயலலிதாவும் இப்போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். இதனால் மனம் உடைந்த கமல் நாட்டை விட்டே சென்றுவிடுவேன் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம், கலைஞரின் உடல் நலமின்மையால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சூழலில் தன்னுடைய குரலை கொஞ்சம் உயர்த்தி ஒலிக்கத்துவங்கினார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடைக்கிறது என்று முதல் முறையாக அரசுக்கு எதிராக கொந்தளித்தார். இதைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். சும்மா வந்துகொண்டு இருந்தவரை அரசியலுக்குவந்துபார் பிறகு தெரியும் என்று தற்போதைய அமைச்சர்கள் அவரை வம்புக்கு இழுக்க இதோ வருகிறேன் பார் என்று உடனடியாக களமிரங்கிவிட்டார்.
அரசியல் கட்சிதொடங்குவதற்கு முன்பு தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவர்களான நல்லகண்ணு, ரஜினிகாந்த், கலைஞர் கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து ஆசிகளையும் வாழ்த்துகளையும் பெற்றார். அவரது கட்சியின் சொற்குறியீடு "நாளை நமதே" என்பதாகும்.
விவசாயமே நாளைய இந்தியா என்ற முழக்கத்தோடு அரசியலில் நுழைந்துள்ளார்